தமிழ் வானலையியல் அருஞ்சொற்பொருள்/TAMIL RF GLOSSARY

 

A - வரிசை

AGRARIAN - வேளாண்

AGRONOMY - உழவியல்

 

B - வரிசை

BIODYNAMIC AGRICULTURE - உயிராற்றல் வேளாண்மை, உயிரோட்ட வேளாண்மை

BIOFERTILIZER - உயிரியுரம்

BIOFUEL - உயிரியெரிபொருள்

BIOME - தாவரப்புலம்

BIOTURBATION - உயிரியுலைவு

 

C - வரிசை

CULTIVATOR - கொத்துக்கலப்பை

COMPLETE FERTILIZER - முற்றுரம்

COMPOST - குப்பையுரம், கழிவுப்பசளை, கழிவுரம்

 

D - வரிசை

DRAPOK NURSERY - சுருள்பாய் நாற்றங்கால்

DROUGHT - வறட்சி

DUST DEVIL / DUST WHIRL - தூசுச் சுழி

 

E - வரிசை

 

F - வரிசை

FALLOW - தரிசு நிலம்

FEEDLOT - தீன்களம்

FLOCCULATION - திரளாக்கம்

 

G - வரிசை

GARDEN TRACKOR - வேளான் இழுவுந்து

 

H - வரிசை

HAND WEEDING - கை(முறை) களையெடுப்பு

HARROW - பரம்படிப் பலகை

 

I - வரிசை

INSECT TRAP CROP - பூச்சியுண்ணும் பயிர்

INTERCULTIVATOR - ஊடுகலப்பை

 

J - வரிசை

 

K - வரிசை

KLYSTRON - கற்றையலைப்பி/கற்றையலைவி - நுண்ணலைகளை ஏற்படுத்தும் சாதனம்; இது ஒரு தன்ப்பட்ட நேரியல் எதிர்மின்னிக் கற்றை வெற்றிடக்குழல் (linear electron beam vacuum tube)

 

L - வரிசை

LDMOS (LATERALLY DIFFUSED MOSFET) - பக்கவிரவலி, பக்கவாட்டு விரவல் மாழையுயிரகி - இச்சாதனத்தில் ஒரு விரவல் ஒரு நேரகம் (p region) முதலில் உருவாக்கப்பட்டு, அதன் மீது மூலவாய் வடிவாய என இரண்டு களப்பு மிகுமாசு எதிரகங்கள் (shallow n+ regions) ஏற்படுத்தப்படுகின்றன. மிகுமாசு நேரகம் (p+) உடல் நேரகத்துடன் (body p) தொடுகையிடப்பட்டு மூலவாயுடன் இணைக்கப்படுகிறது. இது உடல் விளைவை (body effect) நீக்குகிறது. இச்சாதனத்தில் நிகழ் மின்தடுப்பு மிகக்குறைவு. இச்சாதனம் மின்னூட்டணுப் பதித்தல் (ion implantation) மற்றும் விரவல் (diffusion) முறையில் தயாராகிறது படம்

LAND LEASE - நில குத்தகை

 

M - வரிசை

MAGNETRON - காந்தலைப்பி/காந்தலைவி - நுண்ணலைகளை ஏற்படுத்தும் சாதனம்; இதில் எதிர்மின்வாய் மையப்பகுதியிலும் அதனைச் சுற்றி குழல்வடிவ நேர்மின்வாயும்; இந்த அமைப்பு ஒரு நிலைக்காந்தத்தால் இடையடுக்கப்படுத்தப்பட்டுள்ளது

MICROWAVE - நுண்ணலை

MINIMUM SHIFT KEYING (PSK) - மீச்சிறு பெயர்வு இணைத்தல் - கட்டப் பெயர்வு இணைத்தல் (phase shift keying) பண்பேற்ற முறையில் பண்பேற்றலைவடிவத்தில் (modulated waveform) தொடர்ச்சியின்மைகள் நிகழ்கின்றன. இதனால் பக்கப்பட்டைகள் (side bands) சுமப்பிக்கு (carrier) தொலைவாக நீடிக்கின்றன. மீச்சிறு இணைத்தல் முறையில் கட்ட மாற்றங்கள் தொடர்ச்சியின்மை (discontinuituy) இல்லாமல் நடைபெறுகின்றன. இதன் பொருட்டு, அலைவெண் மாற்றங்கள் சுழியக்கடவைப் புள்ளிகளில் (zero crossing points) நடைபெறுகிறது. மீச்சிறு பெயர்வு இணைத்தலில் 0, 1 தருக்க மட்டங்களுக்கான அலைவெண் வேறுபாடு தரவு வீதத்தின் data-rate) பாதியாக அமைக்கப்படுகிறது. மீச்சிறு பெயர்வு இணைத்தல் பண்பேற்றத்தின் நிறமாலை (spectrum), தரவு வீதத்தின் பருமையின் (magnitude) அளவு வரை நீடிக்கும். சில பக்கமடல்கள் (side lobes) தரவு வீத அலைவெண்ணையும் மீஞ்சும். தரவு வீதம் தடத்தின் பட்டையகலத்தை விட மிகச் சிறிதானச் சூழ்நிலைகளில் மீச்சிறு பெயர்வு இணைத்தல் முறை சிறப்பாக விளங்குகிறது. ஒரு சுழியம் திரும்பா அலைவடிவத்தை அலைவெண் பெண்பேற்றியிடம் அளிக்கப்பட்டு, பண்பேற்றக் குறியெண்ணை (modulation index) 0.5 என அமைத்துக்கொண்டால், மீச்சிறு பெயர்வு இணைத்தல் அலைவடிவம் உருவாகும். இந்தப் பண்பேற்றத்தின் குறைபாடு என்னவென்றால், அதன் நிறமாலையின் குறுகலின்மையால் தரவு வீதம் தட பட்டையகலம் அருகில் அமையும் சூழ்நிலைகளில், குறியீடு இடையீடு (intersymbol interference) இழப்பு அதிகரிக்கிறது.

MIXER - கலப்பி

MONOLITHIC MICROWAVE INTEGRATED CIRCUIT (MMIC) - ஒற்றைப்பாள நுண்ணலைச்சில்லு

 

N - வரிசை

NITROGEN - தழைச்சத்து

NUTRITION - போசணை, ஊட்டம்

 

O - வரிசை

OSCILLATION - அலைவு

OSCILLATOR - அலைப்பி

OVERSHOOT - மேற்பாய்வு

 

P - வரிசை

PHOSPHATE (NUTRIENT) - மணிச்சத்து

 

Q - வரிசை

QUALITY (Q) FACTOR - தரக்காரணி - ஒரு வடிப்பியிம் அல்லது ஒத்திசைவுச்சுற்றின் (resonant circuit) மைய அலைவெண்ணிற்கும் அதன் பட்டையகலத்திற்கும் (bandwidth) உள்ள விகிதம். Q = fC/(f2-f1). தரக்காரணி ஒரு ஒத்திசைவுச்சுற்றின் தேர்திறன் அளவை ஆகும்

 

R - வரிசை

RADIO FREQUENCY - வானலை

RESONATOR - ஒத்திசைவி

RINGING - வளையலைவு

RF AMPLIFIER - வானலை மிகைப்பி -

 

S - வரிசை

SLURRY - கலவைச் சகதி

STRATIFICATION - படையாக்கம்

SUSTAINABLE, SUSTAINABLE DEVELOPMENT - வளங்குன்றா, வளங்குன்றா வளர்ச்சி

 

T - வரிசை

TAXONOMY - பாகுபாட்டியல்

TIDAL FLAT - வற்றுப்பெருக்குச் சமதரை

TIDAL MARSH - வற்றுப்பெருக்குச் சேற்றுத்தரை

 

U - வரிசை

UNDERSHOOT - கீழ்ப்பாய்வு

UMOS (TRENCH MOSFET) - அகழியுயிரகி, அகழிமாழையுயிரகி - இந்த மாழையுயிரகி அமைப்பில் அடித்தளம் மீது ஒரு U-பொளி வெட்டப்படுகிறது. இது இரண்டு மாழையுயிரகிகளை ஏற்படுத்துகிறது படம்

 

V - வரிசை

VMOS (VERTICAL MOSFET) - நெடுவுயிரகி, நெடுமாழையுயிரகி, நெடுப்பொளி மாழையுயிரகி - இந்த மாழையுயிரகி அமைப்பில் அடித்தளம் மீது ஒரு V-பொளி வெட்டப்படுகிறது. இந்த சாதனத்தின் வாயில்வாய் V-வடிவமானது குறைபாடகத்தின் வடிவத்தால் (shape of depletion region) அகலமான தடத்தை (wide channel) உருவாக்கி மூலவாய் வடிவாய் இடையே மிக அதிக மின்னோட்டத்தை தாங்க வழிசெய்யும் படம்

 

W - வரிசை

WAVEGUIDE - அலையடை, அலைவழிப்படுத்தி, அலைவழிகாட்டி

 

X - வரிசை

 

Y - வரிசை

YTTRIUM IRON GARNET (YIG) FILTER - திகழியவிரும்புக் கருமணிக்கல் வடிப்பி - திகழியவிரும்புக் கருமணிக்கல் படிகத்தின் தரக்காரணி மிக உயர்வானது. ஆகையால் இது அலைப்பிகளிலும் (oscillators) மற்றும் பன்னெண்மச் சுருதிக்கூட்டிகளிலும் (multi-octave tuners) மிகக் குறைவான இறைச்சலை தருகிறது, திகழியவிரும்புக் கருமணிக்கல் படிகங்கள் குறைக்கடித்திகள் போல் வளர்க்கப்படுகின்றன. இது 10-30 சிற்றங்குல (mil, milli-inch) கோள வடிவத்தில் வடிவவிழைக்கப்படுகிறது. திகழியவிரும்புக் கருமணிக்கல் மூலதனம் நேர்மின்னழுத்தக் காந்தப்புலத்தில் (DC magnetic field) மூழ்கப்படும் போது நுண்ணலை அலைவெண்கள் (microwave frequencies) ஒத்திசைவிக்கின்றது. வடிப்பிகளில் இப்படிகங்கள் வெளிரியப் "பிணைப்பு வளையங்களில்" (berylium "coupling loops") அமைக்கப்படுகின்றன, செங்குத்தாக இரண்டு பிணைப்பு வளையங்கள் அமைந்திருந்தால் பட்டைவிடு வடிப்பிகள் உருவாக்கலாம்; இரண்டு படிகங்களில் நேர்வரிசையாக பிணைப்பு வளையங்கள் அமைதிருந்தால், பட்டைத்தடு வடிப்பிகள் உருவாக்கலாம்.

 

Z - வரிசை

 

தொடரும்...

 

பிற அகராதி இணைப்புகள்

TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES


அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM

புதுப்பிப்பு காரிக்கிழமை, 16 சிலைச்சுறவம் / மார்கழித்தை, 2021 Flag Counter