தமிழ் குறிகையியல் அருஞ்சொற்பொருள்/TAMIL SIGNAL PROCESSING GLOSSARY

 

A - வரிசை

ALIAS FREQUENCY - புனையலைவெண்

ALIASING - புனையலைவு

ALL-PASS FILTER - எல்லாம் வடிப்பி - வீச்சு மறுமொழிப்பண்பு அனைத்து அலைவெண்களில் ஒருமமாக (unity) உள்ள முடிவிலி மறுமொழி வடிப்பி (infinite impulse response filter); இது ஒரு சாதாரண முடிவிலி மறுமொழி வடிப்பியுடன் (IIR filter) ஓடையிணைப்பாக அமைக்கப்படும்; இதன் கட்ட மறுமொழிப்பண்பு (phase response) முதலிருக்கும் முடிவிலி மறுமொழி வடிப்பியை ஈடுகட்டும் வகையில் முறைமை கட்ட மறுமொழிப்பண்பு (system phase response) அலைவெண்ணுக்கு நேர்விகிதமாக (direct proportion) அமைக்கப்படுகிறது

AMPLITUDE - வீச்சு

ANALOG TO DIGITAL CONVERTER (ADC) - எண்ணாக்கி/இலக்கமாக்கி/எண்மையாக்கி

ATTENUATION - மெலிப்பு - ஒரு குறிகை ஒரு வடிப்பு அல்லது வேறு உயிர்பற்ற உறுப்பு மூலமாக பாயும் போது அதில் ஏற்படும் இழப்பின் அளவு; பொதுவாக dB அளவில் அளக்கப்படுகிதது; வரையறை # 20log10(Vout/Vin), இங்கு Vout, Vin என்பது முறையே வெளியீடு, உள்ளீடு குறிகை வீச்சு (signal amplitude) ஆகும்

 

B - வரிசை

BAND-REJECT FILTER - பட்டைத்தடு வடிப்பி

BIT - துணுக்கு

BIT RATE - துணுக்கு வீதம்

BIT STREAM - துணுக்குத் தாரை

 

C - வரிசை

CASCADE - ஓடையிணை (வினைச்சொல்), ஓடையிணைப்பு

CENTER FREQUENCY - மைய அலைவெண் - ஒரு பட்டைவிடு (bandpass filter) அலைப்பியின் மையத்தில் அமைந்த அலைவெண்

CHANNEL ESTIMATION - தடமதிப்பீடு - வானலைத் தடத்தின் குன்றல் (fading) மற்றும் குறியீடு இடையீடை (intersymbol interference) இருக்கும் நிலையில் குறிகைகளை பெறுவதற்கான சமப்படுத்தல் (equalization) முறை

CIRCULAR CONVOLUTION - வட்டச் சுருளல் - இரண்டு சார்புகளுக்கிடையான வட்டச் சுருளல் அச்சார்புகளின் காலசுழற்சி விரிவுகளுக்கு (periodic extension) வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பு x(t)இன் காலமுறை விரிவு (k=-∞:∞)Σx(t - kt) = (k=-∞:∞)Σx(t + kt) எனலாம். இரண்டு தொடர்ந்தச் சார்புகள் (continuos functions) x(t), h(t) ஆகியவைகளின் வட்டச் சுருளல் y(t) = (τ=-∞:∞)∫h(τ).x(t-τ)dτ . தனித்த வரிசைகள் (sequences) x(n), h(n) ஆகியவைகளின் காலசுழற்சி N எனின், அவைகளின் வட்டச் சுருளல் கோவை (expression for circular convolution) x[n] * y[n] = (m=-∞:∞)Σh[m]x[n-m] = (m=-∞:∞)Σh[m] . (k=-∞:∞)Σx[n-m-kN] = (n=-0:N-1)Σx(k).h((n-k)mod N). வட்டச் சுருளல் நேரியல் சுருளலைவிட குறைந்த வெளியீடு மாதிரிகளை (output samples) உற்பத்திசெய்கிறது

CODE SYMBOL - குறிமுறைக் குறியீடு

COHERENT DETECTION - ஒத்தியல் உணர்வு - சுமைப்பியை (carrier) கட்டமடையச் (phase-lock) செய்து தொடர்பை உணரும் முறை

CONTINUOS TIME FOURIER TRANSFORM - தொடர்ந்தக் கால ஃபுரியர் உருமாற்றம் - வரையறைவு : X(w) # (n=-∞:∞)∫x[n]exp(-jwn), இங்கு x[n] எனப்படுவது ஒரு தொடர்ந்தக் காலச் சார்பின் மாதிரிகள்

CONVOLUTION, CONVOLVE - சுருளல், சுருளலிடு - இரண்டு குறிகைகளின் தொகையீட்டுத் தொடுத்தல் (integral concatenation); ஒரு முறைமையின் வெளியீடு மறுமொழி அம்முறைமையின் உள்ளீடு மறுமொழி மற்றும் கணத்தாக்க மறுமொழி ஆகியவைகளின் சுருளல் ஆகும். இரண்டு குறிகைகளின் சுருளல் அவ்விரண்டு குறிகைகளின் ஃபுரியர் உருமாற்றங்களை பெருக்குவதற்கு சமமாகும். இரண்டு தொடர்ந்தக் குறிகைகளின் நேரியல் சுருளலின் (linear convolution) வரையறு: y(t) = x(t) * h(t) = (τ=-∞:∞)∫x(τ)h(t - τ).dτ தனித்தக் குறிகைகளுக்கு தொகையீட்டல் கூட்டலாக மாற்றப்படுகிறது: y(n) = x(n) * h(n) = (k=-∞:∞)Σx(k).h(n-k). கணத்தாக்க மறுமொழி h(k) எதிரொளிக்கப்பட்டு h(-k)ஆக மாற்றப்படுகிறது; பின்னர் இடப்பெயர்க்கப்பட்டு h(n-k)ஆக மாற்றப்படுகிறது, பின்னர் உறுப்புறுப்பாக பெருக்கப்படுகிறது, கிடைசியில் கூட்டப்படுகிறது

 

D - வரிசை

DIGITAL FILTER - எண்வடிப்பி

DIGITAL IMAGE PROCESSING - எண்பிம்பவியல்

DIGITAL IMAGE PROCESSOR - (எண்)பிம்பச் செயலி

DIGITAL SIGNAL PROCESSING - எண்குறிகையியல்

DIGITAL SIGNAL PROCESSOR - (எண்)குறிகைச் செயலி

DIGITAL TO ANALOG CONVERTER (DAC) - ஒப்பாக்கி

DISCRETE FOURIER TRANSFORM - தனித்த ஃபுரியர் உருமாற்றம் - வரையறைவு : a X(k) # (n=0:N-1)Σx[n]exp(-j2Πkn/N)

DISCRETE TIME FOURIER TRANSFORM - தனித்தக் கால ஃபுரியர் உருமாற்றம் - வரையறைவு : X(w) # (n=-∞:∞)Σx[n]exp(-jwn), இங்கு x[n] எனப்படுவது ஒரு தொடர்ந்தக் காலச் சார்பின் மாதிரிகள்; DTFT எனப்படுவது CTFTயின் தொராய மதிப்பாகும்

DISCRETE TIME SEQUENCE - தனித்தக்கால வரிசையம்

DYNAMIC RANGE - இயக்க வரம்பு

 

E - வரிசை

ENERGY PER BIT TO NOISE POWER SPECTRAL DENSITY RATIO (Eb/N0) - துணுக்காற்றல் - இரைச்சல் திறனிறமாலையடர்வு விகிதம் - எண்தொடர்பியல் முறைமைகளில் (digital communication systems) துணுக்குவாரி குறிகை இரைச்சல் விகிதம் (signal to noise ratio per bit) அளவை. SNR = (ஆற்றல் ஒரு துணுக்கு வீதம்Xதுணுக்கு ஒரு நொடி வீதம்)/(இரைச்சல் அடர்வுXபட்டையகலம்) = (energy per bit X bits per second)/(noise desntiy X bandwidth) = Eb/N0 X R/W. இங்கு R/W என்பது துணுக்கு ஒரு நொடி வீதம் ஒரு Hertz வீதம் (bits per second per Hertz), பண்பேற்ற வடிவுருவின் செயற்திறன் (efficiency of the modulation format). Eb/N0 ஒரு பெறுவியின் உள்ளீட்டில் அளக்கப்படுகிறது. இது குறிகையின் வலிமையை வகைக்குறிக்கும். மேலும், Es = Eb.k.r, இங்கு Es என்பது குறியீட்டாற்றல் (energy per symbol), Eb என்பது துணுக்காற்றல் (energy per bit), k என்பது குறியாக்க வீதம் (coding rate). எனவே, E/Ns = E.k.r/Nb, இங்கு E என்பது மொத்த செலுத்தாற்றல் (total transmission energy), Ns, Nb முறையே செலுத்தப்படும் குறியீடுகள் (symbols) மற்றும் தகவல் துணுக்குகள் (information bits) எண்ணிக்கைகள் ஆகும். எனவே dB அலகுகளில் Eb/N0 = Es/N0 - 10log(k) - 10log(R)

ENVELOPE DELAY - சூழ்வுச் சுணக்கம் - ஒரு வீச்சுப் பண்பேற்றக் குறிகை (amplitude modulated signal) ஒரு எண்வடிப்பி (digital filter) வழியாக பாயும்போது, அதில் ஏற்படும் சுணக்கம்; இதன் மாற்றுக் கலைச்சொல் குலச் சுணக்கம் (group delay)

ERROR CODE CODE - பிழைத்திருத்தக் குறிமுறை

ERROR DETECTING CODE - பிழையறி குறிமுறை

 

F - வரிசை

FINITE IMPULSE RESPONSE (FIR) FILTER - முடிவுறு (கணத்தாக்க) (மறுமொழி)(ப்)பண்பு வடிப்பி

FREQUENCY DOMAIN - அலைவெண் ஆட்களம்

FOURIER THEOREM - ஃபுரியர் தேற்றம்

FREQUENCY (DOMAIN) RESPONSE - அலைவெண் (ஆட்கள) மறுமொழிப்பண்பு

G - வரிசை

GROUP DELAY - குலச் சுணக்கம் - ஒரு வீச்சுப் பண்பேற்றக் குறிகை (amplitude modulated signal)ஒரு எண்வடிப்பி (digital filter) வழியாக பாயும்போது, அதில் ஏற்படும் சுணக்கம்; இதன் மாற்றுக் கலைச்சொல் சூழ்வுச் சுணக்கம் (envelope delay)

 

H - வரிசை

 

I - வரிசை

IMPULSE RESPONSE - கணத்தாக்க மறுமொழிப்பண்பு - ஒரு மீச்சிறு குறிகைக்கு ஒரு அமைப்பு அளிக்கும் மறுமொழி; ஒரு கணத்தாக்கம் என்பது முடிவுறா எண்ணிக்கையான செவ்வளைவுளாக (sinusoids) கருதலாம்; நேரியல் காலமாற்றமுறா அமைப்புகளை (linear time invariant systems) கணத்தாக்க மற்மொழிகள் மூலமாகவே சிறப்பியல்புகாணலாம்

IMPULSE INVARIANT RESPONSE - முடிவிலி (கணத்தாக்க) மறுமொழி

INTERSYMBOL INTERFERENCE - குறியீடு இடையீடு

 

J - வரிசை

 

K - வரிசை

 

L - வரிசை

LINEAR TIME INVARIANT (LTI) SYSTEM - நேரியல் காலமாற்றமுறா அமைப்பு

LINEAR PHASE FILTER - நேரியல் கட்ட வடிப்பி - கட்ட மாற்றம் (phase change) அலைவெண் மாற்றத்திற்கு (frequency change) மாறிலியாக பண்புடைய வடிப்பி; இதன் கட்டம்-அலைவெண் வரைவு (phase-frequency plot) ஒரு நேர்க்கோடாக அமையும்; ஆகையால் இதன் குலச்சுணக்கம் (group delay) ஒரு மாறிலி ஆகும். இத்தகைய நேரியல் கட்டம் தொடர்பியலில் உருக்குலைவற்ற குறிகைச் செலுத்தலிற்கான ஒரு அவசியமான பண்பு ஆகும்

 

M - வரிசை

MAGNITUDE - பருமை

MAGNITUDE RESPONSE - பருமை மறுமொழிப்பண்பு

MODULATION - பண்பேற்றம்

MODULATION EFFICIENCY (R/W) - பண்பேற்ற செயற்திறன் - இது எண்பண்பேற்ற முறையின் செயல்வலிமையை வகைக்குறிக்கும். R என்பது துணுக்கு வீதம் (bit rate), W என்பது பட்டையகலம் (bandwidth)

 

N - வரிசை

NOISE - இரைச்சல்

 

O - வரிசை

OCTAVE - எண்மம்

OVERLAP-ADD - மேல்வீழல் கூட்டல் - ஒரு நீண்ட வரிசையம் x[n]இன் சுருளலை கணிக்க செயற்திறனுடைய முறை. இங்கு சுருளல், சிறிய சுருளல்களாக பிரிக்கப்படுகிறது; மேல்படும் பகுதிகள் கூட்டப்படுகிறது

OVERLAP-SAVE - மேல்வீழல் சேமித்தல் - ஒரு நீண்ட வரிசையம் x[n]இன் சுருளலை கணிக்க செயற்திறனுடைய முறை. இங்கு சுருளல், சிறிய சுருளல்களாக பிரிக்கப்படுகிறது; மேல்படும் பகுதிகளில் ஒரு கணத்திலிருந்து பெறப்படும் மதிப்புகள் வைக்கப்பட்டு மற்றொரு கண மதிப்புகள் களையப்படுகிறது

 

P - வரிசை

PARASITIC OSCILLATION - பொய்யலைவு - ஒரு எண்வடிப்பியில் மேல்வழிவு (overflow) ஏற்பட்டால், அலைவுகள் (oscillations) வெளியீட்டில் ஏற்படும். இந்த அலைவுகளைத் தூண்டும் காரணகங்கள் மறைந்துப்போனாலும், இவ்வலைவுகள் நீடிக்கும்

PASS BAND - விடுபட்டை

PERIOD - காலசுழற்சி

PERIODIC (FUNCTION, WAVEFORM ETC.) - காலசுழற்சி(யான) (சார்பு, அலைப்படம் வகையறா)

PINK NOISE - இளஞ்செவ்விரைச்சல் - இந்த இரைச்சலின் மின்திறன் நேர்வீத அகல அலைவெண் இடைவெளியில் (proportionally wide frequency range) சமமாக இருக்கும்; 40-60Hz அலைவெண் வரம்பிலும் 4KHz-6KHz அலைவெண் வரம்பிலும் இளஞ்செவ்விரைச்சலின் மின்திறன் ஒன்றாக இருக்கும். கேட்பொலியியலில் (audio engineering) இது ஒரு மேற்கோள்ளாக அமையும் குறிகை ஆகும்

POWER SPECTRAL DENSITY - திறனிறமாலையடர்த்தி -

PULSE CODE MODULATION (PCM) - துடிப்புக் குறிமுறை பண்பேற்றம் - ஒப்புமை உள்ளீடை ஒவ்வொரு மாதிரியெடுப்புக் கணங்களில் (sampling instants) நேராக எண்ணாக்கும் முறை; இந்த முறையில் துள்ளியம் அதிகம், ஆனால் துணுக்கு வீதமும் (bit rate) உயர்வாக இருக்கும்

 

Q - வரிசை

QUANTIZATION - சொட்டாக்கம்

QUANTIZATION ERROR - சொட்டாக்கப் பிழை - ஒரு ஒப்புமைக் குறிகையை எண்ணியல் குறிகையாக மாற்றும் போது, எண்ணியல் குறிகை இயக்க வரம்பில் (dynamic range) சில தனித்த மட்டங்களில் (discrete levels) மட்டும் வகைக்குறிக்க இயல்வதால், ஒப்புமை-எண்ணியல் வகைக்குறிப்புகளில் இடையே உள்ள வேறுபாடு பிழை

QUANTIZATION LEVEL - சொட்டாக்க மட்டம் - எண்ணாக்கப்பட்டக் குறிகையை வகைக்குறிக்க இயலும் ஏதேனும் தனித்த மட்டம் (discrete level)

 

R - வரிசை

RADAR SIGNAL PROCESSING - கதிரலைக் கும்பா குறிகையியல்

RAKE RECEIVER - வறண்டிப் பெறுவி - பலபாதைக் குன்றல் (multipath fading) விளைவுகளை சமாளிப்பதற்கு வடிவமைக்கப்படும் பெறுவி; இதன் கட்டமைப்பு "விரல்கள்" என அழைக்கப்படும் துணைப்பெறுவிகள்" கொண்டுள்ளது. ஒவ்வொரு விரலும் தனிமையாக ஒரு பலபாதை உறுப்பினை (multipath component) கணிக்கிறது. "தடமதிப்பீடு (channel estimation)" என அழைக்கப்படும் இந்த கணிப்பில் ஒவ்வொரு பலபாதை உறுப்பின் சுணக்கம் (delay) மற்றும் பருமை (magnitude) உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த பலபாதை உறுப்புகளில் அசல் செலுத்தப்படும் குறிகை மற்றும் பருமை-வருகை நேரம் (அதாவது கட்டம்) (magnitude-time of arrival, i.e. phase) குறிகை துணையுறுப்புகள் கொண்டுள்ளன. இவை கூட்டப்பட்டு அசல் செலுத்தப்படும் தகவல்களை மீட்டுப்பெறலாம். வறண்டி பெறுவிகள் CDMA, W-CDMA வானலைச்சாதனங்களில் பயனாகின்றன

REDUNDANCY - மிகைமை - தகவல் துணுக்குகளை பிழைகளிருந்து காப்பதற்கு படியீடு (duplication) செய்தல்

REDUNDANT BIT(S) - மிகைத் துணுக்கு(கள்) - தகவலை வகைக்குறிக்காத, பிழையறிய அல்லது பிழைத்திருத்த உதவும் கூடுதலாக செலுத்தப்பட்டத் துணுக்கு(கள்)

RIPPLE - குறுவலைவு - ஒரு வடிப்பியின் விடுபட்டை (pass-band) அல்லது தடுபட்டை (stop-band) வரம்புகளில் மறுமொழிப்பண்பில் அலைவெண்ணிற்கு சார்பாக ஏற்படும் ஏற்றவிறக்கங்கள் (fluctuations)

S - வரிசை

SAMPLING - மாதிரியெடுப்பு

SEQUENCE - வரிசையம்

SIGNAL TO NOISE RATIO - குறிகை இரைச்சல் விகிதம்

SIGMA-DELTA MODULATION - கூட்டுவேற்று பண்பேற்றம் - ஒரு சிறப்பான ஒப்பாக்கம் (digital-to-analog conversion) அல்லது எண்ணாக்க (analog-to-digital convesion) முறை. இது ஒரு துணிக்குத்தாரை (bit-stream) உற்பத்தி செய்யும் பண்பேற்றியும், அதை பின்தொடர்ந்த ஒரு தாழ் வடிப்பி (low pass filter) அமைகிறது.

SPURIOUS FREE DYNAMIC RANGE (SFDR) - பொய்கையின்றி இயக்கவரம்பு

SPURIOUS SIGNAL - பொய்கை

STOP BAND - தடுபட்டை

SYNTHETIC APERTURE RADAR (S.A.R.) - தொகுத்திறப்புக் கும்பா - துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயற்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும்

 

T - வரிசை

TIME DOMAIN - கால ஆட்களம்

TIME (DOMAIN) RESPONSE - கால (ஆட்கள) மறுமொழிப்பண்பு

TIME SEQUENCE - கால வரிசையம்

TIME SERIES - காலத்தொடர் - சமக்கால இடைவெளியில் அளவீட்டு மூலம் பெறும் தரவுத் தொடர்

 

U - வரிசை

ULTRASOUND - ஊடொலி

 

V - வரிசை

 

W - வரிசை

WHITE NOISE - வெண்ணிரைச்சல் - திறனிறமாலையடர்த்தி கிடைவளையான பண்புடைய இரைச்சல்; வெண்ணிரைச்சல் ஒட்டுறவற்றப் (uncorrellated) பண்பு உடையது; திறனிறமாலையடர்த்தி தன்னொட்டுறவின் (autocorrelation) சார்பு ஆகும்; அதனால் இதன் திறனிறமாலையடர்த்தி மற்றும் நேரியல் நிறமாலை கிடைவளைவாக (flat) உள்ளது

 

X - வரிசை

 

Y - வரிசை

 

Z - வரிசை

Z-PLANE - Z-தளம்

Z-TRANSFORM - Z-உருமாற்றம்- ஒரு எண்ணாக்கப்பட்ட ஒப்புமைக் குறிகையை x(t) = (k=0:-∞:∞)Σx(t)&delta(t-kT) = (k=0:-∞:∞)Σx(kT)&delta(t-kT)ஆக வகைக்குறிக்கலாம், T என்பது மாதியெடுப்பு இடைவெ. இதை லாப்லாஸ் உருமாற்றம் எடுத்தால் X(s) = (k=0:-∞:∞)Σx(kT)&exp(-kTs) அகி விடும். இதில் z = exp(Ts) என பிரதியீடு செய்தால் X(z) = (k=0:-∞:∞)Σx(k)&exp(-k) என்கிற Z-உருமாற்றம் பெறப்படும். லாப்லாஸ் உருமாற்றம் எப்படி ஒப்புமைக் குறிகைகளை வகைக்குறிக்குமோ, அவ்வாறே Z-உருமாற்றம் எண்குறிகைகளை வகைக்குறிக்கிறது

ZERO - சுழியம்

 

தொடரும்...

 

பிற அகராதி இணைப்புகள்

TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES

ENGLISH-TAMIL COMMON DICTIONARY

 


அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM

புதுப்பிப்பு அறிவன்கிழமை, 10 நளி-சிலை, 2008 Free Web Counter