தமிழ் திறன்மின்னணுவியல் மற்றும் மின்திறனியல் அருஞ்சொற்பொருள்/TAMIL POWER ELECTRONICS AND POWER ENGINEERING GLOSSARY

 

A - வரிசை

AC MOTOR - மாறுதிசை மின்னோட்ட மின்னோடி

ANODE - நேர் மின்வாய்

ARC LAMP - மின்வில் விளக்கு

ARMATURE - மின்னகம்

 

B - வரிசை

BALANCE WHEEL - சமச்சக்கரம்

BALANCE POINT - சமநிலை

BALL BEARING - மணித்தாங்கி, மணிப்பொதிகை

BAND GAP - பட்டை இடைவெளி, பட்டையிடுக்கு

BAR MAGNET - சட்டக் காந்தம்

BOOST REGULATOR - ஊக்கு மாற்றி

BRUSH - மின்தொடி

BUCK REGULATOR - இறக்கு மாற்றி

BUCK BOOST REGULATOR - இறக்கு ஊக்கு மாற்றி

BUNCHED CONDUCTOR - கொத்துக்கடத்தி

BUS BAR - கடத்திச் சட்டம் - அதிக மின்னோட்டத்தைத் தாங்கும் மின்கடத்தி; மின்பங்கீட்டமைப்பின் (power distribution system) முக்கியமான உறுப்பாகும்

 

C - வரிசை

CAPACITOR MOTOR - தேக்க மின்னோடி, கொண்ம மின்னோடி

CERAMIC CAPACITOR - வெண்களிமண் மின்தேக்கி

CHARGE PUMP - மின்னூட்ட இறைப்பி

CIRCUIT BREAKER - (சுற்றமைப்புப்) பிரிகலன்

CLAMPING - பற்றிடல்

CLAMPING CIRCUIT - பற்று மின்சுற்று

CLIPPING CIRCUIT - வெட்டு மின்சுற்று

COMMUTATION (BRUSH) - திரட்டல்

COMMUTATION (TURNING OFF) - மின்துண்டிப்பு

COMMUTATOR (BRUSH) - திரட்டி

COMMUTATOR (TURNING OFF) - மின்துண்டிப்பி

COMMUTATOR MOTOR - திரட்டி மின்னோடி

CONTINUOUS MODE - தொடர்ந்தப் பாங்கு - ஒரு நிலைமாறு சீர்ப்பியில் மின்தூண்டி மின்னோட்டம் சுழிய மதிப்பு அடையாமல் இயங்குதல்

CREEPAGE - மின்னூர்வு

CURRENT SENSING - மின்னோட்ட உணர்வு

CURRENT SENSE RESISTOR - மின்னோட்ட உணர் மின்தடை

 

D - வரிசை

DIAC (TRIODE FOR AC) - மாறிருமுனையம், மாறுமின் இருமுனையம் - மாறுமின் இருமுனையம் மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம் குறியீடு

DIRECT DRIVE - நேரோட்டு

DC MOTOR - ஒருதிசை மின்னோட்ட மின்னோடி

DC-DC CONVERTER - ஒருதிசை-ஒருதிசை மாற்றி

DIELECTRIC - மின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி

DIELECTRIC CONSTANT - மின்கடவா எண்

DIELECTRIC LOSS - மின்காப்பிழப்பு

DIELECTRIC RESISTANCE - மின்காப்புத் தடுப்பு

DISCHARGE CURRENT - மின்னிறக்க மின்னோட்டம்

DIFFRACTION (WAVE) - விளிம்பு வளைவு

DIFFUSION, DIFFUSION CURRENT - விரவல், விரவலோட்டம்

DIPOLE MOMENT - இருமுனைத் திருப்பம்

DISCONTINUOUS MODE - தொடரற்றப் பாங்கு - ஒரு நிலைமாறு சீர்ப்பியில் மின்தூண்டி மின்னோட்டம் சுழிய மதிப்பு அடைந்து இயங்குதல்

DRIP PROOF MOTOR - கசிவுக்காப்பு மின்னோடி

DRIVE (AMPLIFIER) - ஓட்டி (மிகைப்பி)

 

E - வரிசை

EMC-EMI - இடையீடு ஏற்பு திறன், மின்னொத்தியல்புத் திறன்

ELECTROLYTIC CAPACITOR - மின்னாற்பகு மின்தேக்கி

ELECTROSTATIC DISCHARGE (ESD) - நிலைமின்னிறக்கம்

ELECTROMAGENETIC COMPATIBILITY (EMC) - மின்காந்த ஒத்தியல்பு, மின்காந்த ஒத்தியல்புத் திறன்

ELECTROMAGENETIC INTERFERENCE (EMI) - மின்காந்த இடையீடு, மின்காந்த இடையீட்டுத் திறன்

ELECTROMAGENETIC SUSCEPTIBILITY (EMS) - மின்காந்த ஏற்பு, மின்காந்த ஏற்புத்திறன்

EQUIVALENT SERIES INDUCTANCE (ESI) - சமவலு தொடர்மின்தூண்டம்

EQUIVALENT SERIES RESISTANCE (ESR) - சமவலு தொடர்மின்தடுப்பு

 

F - வரிசை

FIELD WINDING - புலச் சுருணை - ஒரு மின்னோடியில் ஒன்றுவிட்டதாக வடக்கு தெற்கு முனைகளை ஏற்படுத்தும் சுருணை

FORCED COMMUTATION - வலுக்கட்டாய மின்துண்டிப்பு

FORWARD BIAS - முன்னோக்குச் சாரிகை

FORWARD RECOVERY TIME - முன்னோக்கு மின்மீட்டு நேரம்

 

G - வரிசை

GROUND RETURN - நிலத் திரும்பம்

 

H - வரிசை

HYSTERISIS - தயக்கம் - கீழிலிருந்து மேல் மற்றும் மேலிருந்து கீழ் மாறும் போது கருவுணர் வேறுபடுதல்

 

I - வரிசை

INDUCTION MOTOR - தூண்டல் மின்னோடி

INERTIA - நிலைமம்

INSULATED GATE BIPOLAR TRANSISTOR (IGBT) - காப்புவாயிலி, மின்காப்பு வாயில் சந்தி திரிதடையம் - மூன்று முனைகள் கொண்ட திறன் குறைக்கடத்தின் சாதனம், இது அதிக செயற்திறன், வேக நிலைமாறு தன்மை கொண்டுள்ளது, மாறி மாறி நேரக எதிரக (P-N-P-N) அடுக்குகள் கொண்டுள்ளது குறியீடு

INVERSION - நேர்மாறல்

INTERACTION - உள்வினை

INSTRINSIC SEMICONDUCTOR - உள்ளார்ந்தக் குறைக்கடத்தி

ION - மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்

IONIZATION - மின்னணுவாக்கம்

ION CURRENT - மின்னணுவோட்டம்

ION SHEATH - மின்னணுவுறை

IONIC CONDUCTIVITY - மின்னணுக் கடத்தம்

 

J - வரிசை

 

K - வரிசை

KINETIC ENERGY - இயக்காற்றல்

 

L - வரிசை

LEAKAGE CURRENT - கசிவு மின்னோட்டம்

LEPTON - மெதுனி - குறை பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்; இவை முழுச்சுழல் (integer spin) கொண்டவை

 

M - வரிசை

MALLEABILITY - தகடுமை, தகடாகும் தன்மை

MAGNETIZATION - காந்தமை, காந்தத்தன்மை

METADYNE - மாற்றியங்கி - மூன்று அல்லது அதற்கு மேலான மின்தொடிகள் உள்ள மின்னோடி; மிகைப்பி அல்லது சுழல் மின்மாற்றியாகப் பயனாகிறது

 

N - வரிசை

NO LOAD CHARACTERISTICS - சுமையில் சிறப்பியல்புகள்

NEGATIVE ION - எதிர் மின்னணு

 

O - வரிசை

OVERCURRENT - மிகுமின்னோட்டம்

OVERCURRENT PROTECTION - மிகுமின்னோட்டக் காபந்து

OVERLOAD - மிகுசுமை

 

P - வரிசை

PEAK CURRENT - உச்ச மின்னோட்டம்

PEAK LOAD - உச்சச் சுமை

POTENTIOMETER - மின்னழுத்தவளவி

POWER DISTRIBUTION SYSTEM - மின்பங்கீட்டமைப்பு

POWER FACTOR - திறன் காரணி - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தல் கோணத்தின் துணைசெவ்வளைவு (cosine)

POWER FACTOR CORRECTION - திறன் காரணி திருத்தம் - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தலை குறைப்பது

POWER GOOD - நற்திறன் - ஒரு மின்வழங்கி அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை; வேற்றுப் பெயர் 'சரிதிறன்' (Power OK)

POWER OK - சரிதிறன் - ஒரு மின்வழங்கி அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை; வேற்றுப் பெயர் 'நற்திறன்' (Power OK)

POWER RAIL - மின் கிராதி

POWER SUPPLY - மின் வழங்கி

POWERED - திறனளிப்பு/மின்னளிப்பு நிலை

POWER DOWN - திறனகற்றம்/மின்னகற்றம், திறனகற்று/மின்னகற்று

POWER UP - திறன்தொடக்கம்/மின்தொடக்கம், திறன்தொடங்கு/மின்தொடங்கு

 

Q - வரிசை

QUIESCENT CURRENT - அமைதிய மின்னோட்டம்

 

R - வரிசை

RAMP DOWN - சரிவிறக்கம்

RAMP UP - சரிவேற்றம்

RATING - செயல்வரம்பு

REVERSE BIAS - பின்னோக்குச் சாரிகை

REVERSE RECOVERY TIME - பின்னோக்கு மின்மீட்டு நேரம்

RHEOSTAT - தடைமாற்றி

ROTATORY COMPRESSOR - சுழல் அழுத்தி

ROTORY TRANSFORMER - சுழல் மின்மாற்றி

 

S - வரிசை

SATURATION - தெவிட்டல்

SAW-TOOTH (WAVEFORM) - ரம்பப்பல் (அலைவடிவம்)

SILICON CONTROLLED RECTIFIER - மண்ணியத்திருத்தி

SOFT-START - மென்துவக்கம் - உட்பாய்வு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு முறைமையை மெதுவான சரிவேற்றத்துடன் (ramp-up) தொடக்குதல்

STEADY STATE - நிலைநிலை

STEP-DOWN TRANSFORMER - படியிறக்கு மின்மாற்றி

STEP-DOWN (VOLTAGE) CONVERTER - படியிறக்கு (மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் இறக்கு மாற்றி

STEP-UP TRANSFORMER - படியேற்று மின்மாற்றி

STEP-UP (VOLTAGE) CONVERTER - படியேற்று (மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் ஊக்கு மாற்றி

SUPPLY VOLTAGE - வழங்கல் மின்னழுத்தம்

SURGE - எழுச்சி

SURGE PROTECTION - எழுச்சிக் காபந்து

SURGE PROTECTOR - எழுச்சிக்காப்பி

SWITCH - ஆளி, நிலைமாறி

SWITCH MODE POWER SUPPLY - நிலைமாறு மின்வழங்கி

SWITCHING REGULATOR - நிலைமாறு சீர்ப்பி

SYNCHRONOUS MACHINE - ஒத்தியங்கு இயந்திரம்

SYNCHRONOUS MOTOR - ஒத்தியங்கு மின்னோடி

 

T - வரிசை

TACHOMETER - சுற்றுமானி

TANTALLUM CAPACITOR - இஞ்சாய மின்தேக்கி

THERMAL SHUTDOWN - வெம்மை அணையல்

TURNS RATIO - சுற்றுகள் விகிதம்

THERMOSTAT - வெப்பநிலைப்பி

THRESHOLD (VOLTAGE/CURRENT) - கருவுணர் (மின்னழுத்தம்/மின்னோட்டம்)

THYRISTOR - வாயில்தடையம் - நேரகம்-எதிரகம்-நேரகம்-எதிரகம் (p-n-p-n) என நான்கு மண்டலங்கள் அடுக்காக அமைக்கப்பட்டச் சாதனம்; இச்சாதனத்தில் மூன்று அல்லது நான்கு சந்திகள் இருக்கும்; நிலைமாற்றி அல்லது மின்திருத்தியாக செயல்படுகிறது; மண்ணியத்திருத்தி,

TRANSIENT(S) - திரிவு(கள்)

TRANSIENT RESPONSE - திரிநிலை மறுமொழி

TRIAC (TRIODE FOR AC) - மாறுமும்முனையம், மாறுமின் மும்முனையம் - இரண்டு பின்னிணைக்கப்பட்ட, வாயில்வாய்கள் ஒன்றிணைக்கப்பட்ட மண்ணியத்திருத்திகள் (SCRs) அல்லது வாயில்தடையங்களுக்கு (thyristors) செயற்கூற்றுச் சமமானச் சாதனம்; இது ஒரு இருதிசை நிலைமாறு சாதனம்; வாயில்வாய் விசைவிக்கப்படும் போது இருதிசையிலும் கடத்தும் குறியீடு

TRIGGER, TRIGGERING - குதிரை, குதிரையிடல்

TRIGGER CIRCUIT - குதிரைச் சுற்று

 

U - வரிசை

UNDERVOLTAGE LOCKOUT - குறைமின்னழுத்தப் பூட்டணையல்

 

V - வரிசை

VALENCE BAND - இணைதிறன் பட்டை

VELOCITY - திசை வேகம்

 

W - வரிசை

 

X - வரிசை

X-RAY - ஊடுக்கதிர்

 

Y - வரிசை

 

Z - வரிசை

ZERO CURRENT SWITCHING (ZCS) - சுழிமின்னோட்ட நிலைமாறல் - இவ்வகை நிலைமாறு சீர்ப்பிகளில் ஒரு ஒத்திசை மின்தூண்டி ஒரு குறைக்கடத்தி ஆளியுடன் தொடரிணைப்பில் அமைக்கப்படுகிறது (resonant inductor in series to semiconductor switch), மின்னோட்டம் சுழி நிலை அடையும் போது ஆளியானது நிகழ்த்தப்படுகிறது அல்லது அகழ்த்தப்படுகிறது படம்

ZERO VOLTAGE SWITCHING (ZVS) - சுழிமின்னழுத்த நிலைமாறல் - இவ்வகை நிலைமாறு சீர்ப்பிகளில் ஒரு ஒத்திசை மின்தேக்கி ஒரு குறைக்கடத்தி ஆளியுடன் இணையிணைப்பில் அமைக்கப்படுகிறது (resonant cap in parallel to semiconductor switch), மின்னழுத்தம் சுழி நிலை அடையும் போது ஆளியானது நிகழ்த்தப்படுகிறது அல்லது அகழ்த்தப்படுகிறது படம்

 

தொடரும்...

 

பிற அகராதி இணைப்புகள்

TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES

ENGLISH-TAMIL COMMON DICTIONARY

 


அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM

புதுப்பிப்பு ஞாயிற்றுக்கிழமை, 27 நளிச்சிலை / கார்த்திகைமார்கழி, 2020

Free Website Counter
Free Website Counter